மணவாழ்வில் மகிழ்ச்சி மலர வேண்டுமா?
பகுதி 3
மணத்துணைக்கு உண்மையாக இருங்கள்
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ‘உண்மையுள்ளவர்களாக’ இருக்க வேண்டும்.
திருமண வாழ்வு சந்தோஷமாக இருக்க இது ரொம்ப முக்கியம்.
உண்மையாக இல்லாவிட்டால், கணவன் மனைவிக்கு இடையே நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.
நம்பிக்கையே மகிழ்ச்சியான மணவாழ்விக்கு அஸ்திவாரம்!
இன்று, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இல்லாததால் அநேக குடும்பங்கள் சின்னாபின்னமாகி வருகின்றன.
உங்கள் குடும்ப வாழ்க்கை அப்படி ஆகாமல் இருக்க, இங்கு கொடுக்கப்பட்டுள்ள இரண்டு விஷயங்களைச் செய்யுங்கள்.
1 மணத்துணைக்கு முன்னுரிமை கொடுங்கள்
‘மிக முக்கியமான காரியங்கள் எவையென நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.’
உங்கள் வாழ்க்கையில் திருமண பந்தம் ரொம்ப முக்கியமாக இருப்பதால் அதற்கு முன்னுரிமை கொடுங்கள்.
உங்கள் கணவருக்கு (அல்லது மனைவிக்கு) முக்கியத்துவம் தர வேண்டும்,
நீங்கள் இருவரும் வாழ்க்கையை சந்தோஷமாக ‘அனுபவிக்க’ வேண்டும் துணையை அலட்சியம் செய்வதையோ உதாசீனப்படுத்துவதையோ அவர் ஒருபோதும் விரும்பமாட்டார்.
அவரை (அல்லது அவளை) சந்தோஷமாக வைத்துக்கொள்ள உங்களாலான எல்லாவற்றையும் செய்யவேண்டும்
உங்கள் துணை உங்களுக்கு மிகவும் முக்கியமானவர், மதிப்புவாய்ந்தவர் என்பதை அவர் புரியும்படி நடந்துகொள்ளுங்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்?
இரண்டு பேரும் தவறாமல் நேரம் செலவிடுங்கள். எந்த வேலையாக இருந்தாலும் அதைச் சேர்ந்தே செய்யுங்கள்
“நான்” என்று யோசிக்காமல் “நாம்” என்று யோசியுங்கள்
2 கெட்ட ஆசைகளைத் தவிர்த்திடுங்கள்
“காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்.”
ஒருவர் ஒழுக்கங்கெட்ட விஷயங்களையே எப்போதும் யோசித்துக்கொண்டிருந்தால், அவர் தன் கணவருக்கோ மனைவிக்கோ உண்மையாக இருக்க முடியாது.
எந்தவொரு பெண்ணையும் தவறான எண்ணத்தோடு பார்க்கக் கூடாது. அதோடு, கணவரை (அல்லது மனைவியை) தவிர வேறு யாரோடும் நெருங்கி பழகுவதைத் தவிர்த்திடுங்கள்.
‘என் வாழ்க்கையில் என் கணவரை (அல்லது மனைவியை) தவிர வேறு யாருக்கும் இடமில்லை’ என்பது மற்றவர்களுக்குப் புரியும்படி நடந்துகொள்ளுங்கள்
உங்கள் துணையல்லாத ஒருவரோடு பழகுவது கணவருக்கு (அல்லது மனைவிக்கு) பிடிக்கவில்லை என்றால் அவரோடு பழகுவதை நிறுத்துங்கள்
நீங்கள் செய்ய வேண்டியது...
உங்கள் பலவீனங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
உதவியைப் பெற தயங்காதீர்கள்.
கெட்ட ஆசைகளை விட்டொழிக்க தொடர்ந்து போராடுங்கள், சோர்ந்துபோகாதீர்கள்.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...
என் கணவரோடு (அல்லது மனைவியோடு) நான் எப்படி அதிக நேரம் செலவிடலாம்?
என் கணவர்தான்/மனைவிதான் என்னுடைய உயிர் தோழனா/தோழியா?