மணவாழ்வில்
மகிழ்ச்சி மலர வேண்டுமா?
பகுதி 2
கல்யாணமான புதிதில், உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உயிருக்கு உயிராய் இருக்கும் கணவன் மனைவிக்கு இடையேகூட பிரச்சினைகள் வரும்.
திருமண வாழ்வு இனிக்க செய்யவேண்டியவை
கணவரே குடும்பத்தின் தலைவர்.
கணவர்களே, மனைவியிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.
கணவனுக்கு, மனைவி நல்ல துணையாக இருக்க வேண்டும்.
கணவன் மனைவியை மதிப்பு மரியாதையோடும், அன்பு பாசத்தோடும் நடத்த வேண்டும்.
உங்கள் மனைவியை நெஞ்சார நேசியுங்கள்.
மனைவியின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
மனைவிகளே, கணவருக்கு ஆழ்ந்த மரியாதை காட்டுங்கள்.
குடும்ப பொறுப்பை சரியாகச் செய்ய அவருக்கு உதவுங்கள்.
அவர் எடுக்கும் தீர்மானங்களுக்கு முழு ஆதரவு கொடுங்கள்.
அவருக்குப் பக்கபலமாக இருங்கள். இப்படிச் செய்தால், உங்கள் கணவரின் பார்வையில் நீங்கள் வைரமாக ஜொலிப்பீர்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்?
நல்ல கணவனாக அல்லது மனைவியாக இருக்க இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் துணையிடம் கேளுங்கள். அவர் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள், அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள்
பொறுமையாக இருங்கள். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அன்பாக நடக்க காலம் எடுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
2 உணர்ச்சிகளுக்கு மதிப்புக்கொடுங்கள்
உங்கள் கணவர் அல்லது மனைவியின் விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
ஒருவருக்கொருவர் ‘மென்மையாய் நடந்துகொள்ள’ வேண்டும்.
“சிந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்; ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்.” அதனால், நன்கு யோசித்துப் பேசுங்கள்.
அன்பாகவும் பாசமாகவும் பேச வேண்டும்.
நீங்கள் என்ன செய்யலாம்?
முக்கியமான விஷயங்களைப் பேசும்போது அமைதியாக இருக்கவும், பொறுமையாக கேட்கவும்.
என்ன சொல்ல வேண்டும், அதை எப்படிச் சொல்ல வேண்டும் என்று முன்னதாகவே யோசியுங்கள்.
கல்யாணத்திற்குப் பிறகு நீங்கள் இருவரும் “ஒரே உடலாக” இருக்கிறீர்கள்.
இருந்தாலும், ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் இருவரும் வித்தியாசமாக யோசிப்பீர்கள்.
அதனால், ஒன்றுபோல் யோசிக்கவும் செயல்படவும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
எந்த விஷயத்திலும் இரண்டு பேரும் சேர்ந்து தீர்மானம் எடுப்பது ரொம்ப முக்கியம்.
“திட்டமிடுவதற்கு முன்பு நல்ல அறிவுரைகளைப் பெற வேண்டும்”
நீங்கள் என்ன செய்யலாம்?
ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்கள் கணவரிடம் (அல்லது மனைவியிடம்) சொல்லுங்கள்
சின்ன சின்ன விஷயங்களில்கூட தீர்மானம் எடுப்பதற்கு முன் அவருடைய கருத்தைக் கேளுங்கள்
எதார்த்தமாக இருங்கள்... நம்பிக்கையோடு வாழுங்கள்...
நீங்கள் எதையும் நூறு சதவீதம் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள், உங்கள் கணவரிடமும் (அல்லது மனைவியிடமும்) அதை எதிர்பார்க்காதீர்கள்.
அவருடைய நல்ல குணங்களை மட்டுமே பாருங்கள்.
நாட்கள் செல்லச் செல்ல, உங்கள் திருமண பந்தம் பலப்படும்.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...
என்னைவிட அவர்மீது (அல்லது அவள்மீது) எனக்கு அதிக அக்கறை இருக்கிறது என்பதை நான் வெளிப்படையாகக் காட்டுகிறேனா?
என் கணவர்மீது (அல்லது மனைவிமீது) அன்பும் மதிப்பும் இருப்பதைக் காட்ட இன்று நான் என்ன செய்தேன்?