வரவுசெலவை சமாளிப்பது எப்படி?
பகுதி 5
“நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால்
வெற்றி பெறுவாய்.”
குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள பணம்
நமக்கு முக்கியம்.
“பணம் பாதுகாப்பு தரும்”
கணவன் மனைவியாகச் சேர்ந்து பண விஷயங்களைப்
பற்றி பேசும்போது சில சமயம் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம்.
இருந்தாலும்,
பணப்பிரச்சினை உங்கள் வாழ்க்கையில் பெரிய விரிசலை ஏற்படுத்தாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்.
பணத்தை எப்படிச் செலவிடலாம் என்பதைப்
பற்றி இருவரும் சேர்ந்து முடிவெடுங்கள், ஒருவரையொருவர்
நம்புங்கள்.
1 நன்கு திட்டமிடுங்கள்
“உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட
விரும்பினால், அதைக் கட்டி முடிக்கப் போதுமான வசதி தனக்கு
இருக்கிறதா என்று முதலில் உட்கார்ந்து செலவைக் கணக்கிட்டுப் பார்க்காமல் இருப்பானா?”
வரவுசெலவைப் பற்றி இருவரும் கலந்துபேசி திட்டமிடுவது ரொம்பவே
முக்கியம். என்ன வாங்க போகிறீர்கள், அதற்கு எவ்வளவு
செலவாகும் என்பதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். பணம் இருப்பதால் நீங்கள்
ஆசைப்பட்டதையெல்லாம் வாங்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். கடன் வாங்குவதைத்
தவிர்த்துவிடுங்கள். வரவுக்கேற்ற செலவு செய்யுங்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்?
மாதக் கடைசியில் உங்களிடம் பணம் மிச்சம்
இருந்தால் அதை என்ன செய்வதென இருவராகத் தீர்மானியுங்கள்
பண நெருக்கடி ஏற்பட்டால்,
உங்கள் செலவுகளை எப்படிக் குறைக்கலாம் என்று திட்டமிடுங்கள்.
உதாரணத்திற்கு, அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவதைக்
குறைத்துக்கொள்ளுங்கள்
2 நேர்மையாக இருங்கள், வெளிப்படையாகப் பேசுங்கள்
மனிதர்களுடைய பார்வையில் நேர்மையாக இருங்கள்.’ நீங்கள் எவ்வளவு
சம்பாதிக்கிறீர்கள், எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை
உங்கள் கணவரிடம் அல்லது மனைவியிடம் மூடிமறைக்காமல் சொல்லுங்கள்.
ஒரு பெரிய செலவு செய்ய வேண்டியிருந்தால்
அதைப் பற்றி நீங்கள் இருவரும் முதலில் கலந்துபேசுங்கள். நீங்கள் சம்பாதிக்கும்
பணத்தை,
உங்களுடைய பணமாகப் பார்க்காமல் குடும்பத்துடைய பணமாகப் பாருங்கள். பண
விஷயத்தைப் பற்றி எதையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பேசும்போது, நீங்கள் இருவரும் சந்தோஷமாகவும் சமாதானமாகவும் இருக்கலாம்.
நீங்கள் என்ன செய்யலாம்?
கைசெலவுக்கு நீங்கள் இருவரும் தனித்தனியாக
எவ்வளவு பணம் வைத்துக்கொள்ளலாம் என்று முன்னதாகவே முடிவு செய்யுங்கள்
பண விஷயத்தில் பிரச்சினை வரும்வரை
காத்திருக்காதீர்கள், அதைப் பற்றி முன்னதாகவே
பேசுங்கள்
பணம் எவ்வளவு முக்கியம்?
பணம் முக்கியம்தான்,
ஆனால் பணத்தை நினைத்து அநாவசியமாகக் கவலைப்படாதீர்கள், அதனால் உங்களுக்குள் பிரச்சினைகள் வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். கைநிறைய
பணம் இருந்தால்தான் சந்தோஷமாக வாழ முடியும் என்று நினைப்பது தவறு. “எல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. கோடி ரூபாய் கொடுத்தாலும் சந்தோஷமான திருமண
வாழ்க்கையை விலைக்கு வாங்க முடியாது. அதனால், கொஞ்ச பணம் இருந்தாலும்
அதை வைத்துத் திருப்தியாக வாழுங்கள். கடவுளை முழுமையாக நம்புங்கள். அப்போது,
உங்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், யெகோவாவுடைய
ஆசீர்வாதமும் கிடைக்கும்.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...
கடனில்லாமல் வாழ நாங்கள் குடும்பமாக என்ன
செய்ய வேண்டும்?
பண விஷயத்தைப் பற்றி நாங்கள் இருவரும்
கடைசியாக,
எப்போது வெளிப்படையாகப் பேசினோம்?