அன்றாட பரபரப்புகளுக்கு இடையே உங்களுக்கு என குறிப்பிட்ட ஒரு நேரத்தை ஒதுக்குவதை கட்டாய மாக்கிக் கொள்ளுங்கள்.

0 SUN LIFE CARE

 

அன்றாட பரபரப்புகளுக்கு இடையே உங்களுக்கு 

என குறிப்பிட்ட ஒரு நேரத்தை ஒதுக்குவதை 

கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள்.

அன்றாட பரபரப்புகளுக்கு இடையே உங்களுக்கு என குறிப்பிட்ட ஒரு நேரத்தை ஒதுக்குவதை கட்டாய மாக்கிக் கொள்ளுங்கள். வேலைகளை சரியான நேரத்தில் திட்டமிட்டு முடித்தாலே உங்களுக்கான நேரம் நிச்சயம் கிடைக்கும்.

டிப்பு, வேலை, குடும்பம் என பரபரப்பான இயந்திர வாழ்க்கைக்குள், எதையாவது நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் பலருக்கும் தனக்காக நேரம் ஒதுக்குவது கடினமான ஒன்றாகவே இருக்கிறது. நமக்காக தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குவதன் மூலம் மனதையும், உடலையும் புத்துணர்வோடு வைத்துக்கொள்ள முடியும்.

 

எப்படி இதை சாத்தியமாக்கலாம்

நேர மேலாண்மை முக்கியமானது:

அன்றாட பரபரப்புகளுக்கு இடையே உங்களுக்கு என குறிப்பிட்ட ஒரு நேரத்தை ஒதுக்குவதை கட்டாய மாக்கிக் கொள்ளுங்கள். வேலைகளை சரியான நேரத்தில் திட்டமிட்டு முடித்தாலே உங்களுக்கான நேரம் நிச்சயம் கிடைக்கும்.

 

வேலைகளை பகிர்ந்து கொடுங்கள்:

முன்பு ஆண்கள் மட்டும் வேலைக்கு செல்வார்கள். பெண்கள் வீட்டை நிர்வகிப்பார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இருவரும் சம்பாதித்தால் மட்டுமே குடும்பத்தை சீராக நிர்வகிக்க முடியும். 

 

இத்தகைய நிலையில் வீட்டு வேலைகளையும், இதர வேலைகளையும் குடும்பத்தில் உள்ள அனைவரும் பகிர்ந்து செய்வதே சிறந்தது. இதன் மூலம் ஒருவர் மீது வேலைப் பளு விழுவதைத் தடுக்கலாம். அவரவருக்கான தனிப்பட்ட நேரமும் கிடைக்கும். 

 

உங்களுக்கான நேரம் என்பது ஏன் முக்கியம்?

சமீபத்திய ஆய்வுகளின்படி, நூற்றுக்கு 90 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒன்றை நினைத்து தொடர்ந்து சிந்திப்பதும், கவலைப்படுவதும் மன அழுத்தம் எற்படுவதற்கு வழிவகுப்பதாக மன நல நிபுணர்கள் கூறுகின்றனர். 

 

எனவே, ஒரே மாதிரியான தினசரி வேலைகளில் இருந்து வெளியே வருவதற்கு உங்களுக்கான நேரம் என்பது அவசியமானது. 

 

அந்த நேரத்தில் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். சமையல், புத்தகம் வாசிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, வெளியே சென்று வருவது, இசை கேட்பது என எதுவாகவும் இருக்கலாம். இது உங்களுக்கு அடுத்த வேலைகளுக்கான புத்துணர்ச்சியைக் கொடுப்பதோடு, உங்களையும்  உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் உற்சாகமாக வைப்பதற்கும் உதவும். 

 

ஆலோசனைக்கு அணுகவும் : 8148683160

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.