அழகிய பொருள் என்றும் ஆனந்தம் அளித்திடும்
அழகு என்றும் நிலைத்திருக்காது
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை
சமாளிக்க உதவும் திறனே கல்வி
எதையும் எதிர்பார்க்காதவனுக்கு
ஏமாற்றம் இல்லை
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
நச்சுமரம் நற்கனி ஈனாது
புறங்கூறாதவனே நல்ல நண்பன்
நேசனைக் காணாவிடத்து நெஞ்சாரத் துதி
செல்வன் சொல்லுக்கு அஞ்சான்
வீரன் போருக்கு அஞ்சான்
வாட்டிக்கொள்வதை விட
மகிழ்வது மேல்
காலத்தின் அருமை அறிந்தவர்
அதை வீணாக்கமாட்டார்
பணம் பார்த்துப் பண்டம் கொள்
குணம் பார்த்து பெண்ணை கொள்.
பைசாவை கவனித்துக்கொள்.
ரூபாய்கள் தானாகக் கவனித்துக்கொள்ளும்
பணம் வைத்திருந்தால் பயம்.
இல்லாதிருந்தால் துயரம்
பணத்தின் மேல் ஆசை
எல்லா தீங்குகளுக்கும் ஆணிவேர்
உங்களின் இனிய இயல்பே
உங்கள் உள்ளத்திற்கு அழகாகும்

