Grandma's Remedies பாட்டி வைத்திய குறிப்புகள்

0 SUN LIFE CARE







அம்மை தழும்பு குறைய
கசகசா, மஞ்சள், கறிவேப்பிலை மூன்றையும் அரைத்து அம்மை தழும்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் அம்மை தழும்பு குறையும்

பிறக்கும் குழந்தை ஊட்டச்சத்துடன் இருக்க:
கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச்சத்துடன் இருக்கும்

நீர்க் கடுப்பு குறைய:
புளியங்கொட்டை தோலை எடுத்து உலர்த்தி இடித்து தூள் செய்து தினமும் பாலில் சேர்த்து குடித்து வர நீர்க் கடுப்பு குறையும்.

சூதக வலி தீர:
கவிழ் தும்பை இலையைத்  தேன் விட்டு வதக்கி நீரில் கொதிக்க வைத்து காலை மாலை சாப்பிட்டு வர சூதக வலி தீரும்

குடலில் கசடு தங்காமல் சுத்தமாக
காலை உணவு அருந்துவதற்கு முன் வில்வ பழத்தின் சதை பகுதியுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட குடலில் கசடு தங்காமல் சுத்தமாகும்.

பாத எரிச்சல் குணமாக
மருதாணியை எலுமிச்சம் பழ சாறுடன் கலந்து பாதத்தின் மீது தடவினால் பாத எரிச்சல் குணமாகும்.

கால் ஆணி மறைய
வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து போட கால் ஆணி மறையும்.

பித்தம் குறைய
அண்ணாச்சி பழ வற்றல்களை பாலில் ஊற வைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

பித்த வெடிப்பு குணமாக வலி தீர
அரச மரத்தின் பாலை எடுத்து பித்த வெடிப்பின் மேல் பூச வேண்டும். அத்தி மரத்திலிருந்து பாலை எடுத்து வலி உள்ள இடத்தில் பத்து போடவும்.


தொண்டை வலி குறைய
அண்ணாச்சி பூவின் பொடியை பாலில் போட்டு காய்ச்சி காலை மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.

தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும் குணமாக
பூவரச மர வேர் மற்றும் அதன் பட்டையை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும் விலகும்.

இருமல் நிற்க தொண்டை எரிச்சல் குணமாக
எலுமிச்சை பழ சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும் தொண்டை எரிச்சல் குணமாகும்.

மூட்டு வலி குறைய
கணப்பூண்டு இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டு வலி குறையும்.

கண் எரிச்சல், வாய் நீர் ஊறல், வாய் கசப்பு சரியாக
முருங்கைப் பூவை பருப்புடன் சமைத்து உண்ண கண் எரிச்சல், வாய் நீர் ஊறல், வாய் கசப்பு சரியாகும்.

விக்கல் மறைய
கடுக்காய் தோலை மைய இடித்து தூள் செய்து விக்கல் வரும்போது அரை தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட விக்கல் மறையும்.

கல்லீரல் சம்பந்தமான நோய் குணமாக
தினமும் ஒரு கொய்யாபழம் சாப்பிட்டு வர கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். 

சளி குறைய
மிளகை நெய்யில் வறுத்து பொடி செய்து தேன் கலந்து காலை மாலை சாப்பிட்டால் சளி குறையும்.

மார்புச் சளி குணமாக:
ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து தினமும் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச் சளி குணமாகும்.

மார்பு  வலி குறைய
கருந்துளசி இலை, செம்பருத்தி பூ ஆகியவற்றை கஷாயம் செய்து 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

நகச்சொத்தை குறைய
படிகாரத்தைப் பொடித்து நீர் விட்டு கெட்டியாக குழைத்து நகச் சொத்தையின் மீது வைத்து கட்டினால் நகச் சொத்தை குறையும்.

மூலம் வராமல் தடுக்க
பப்பாளிபழத்தையும் மாம்பழத்தையும் வெட்டி தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் மூலம் வராமல் தடுக்கலாம்.

தேள் கடி விழம் குறைய
எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேள் கடி விழம் குறையும்.

தலைவலி குறைய
ஏலக்காய், கிராம்பு, வெற்றிலைகாம்பு ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி குறையும்.

அதிக தாகம் பித்த மயக்கம் குறைய
பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து சிறிது சூடுபடுத்தி சாப்பிட்டால் அதிக தாகம், பித்த மயக்கம் குறையும்.

காதில் உள்ள பூச்சிகள் வெளியேற
காதில் பூச்சிகள் நுழைந்துவிடும் போது இரண்டு துளி வெங்காயச் சாற்றை விட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும்.

சுளுக்கு குணமாக
நீரில் மிளகுத்தூளும் கற்பூரத்தையும் கொதிக்க வைத்து பிறகு ஒரு துணியில் நனைத்து சுளுக்கு உள்ள இடத்தின் மீது போட குணமாகும்.

புண் ஆறுவதற்கு
உடம்பில் சாதாரண காயங்கள் இருந்தால் கடுக்காய் எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து போட்டு வந்தால் புண் ஆறிவிடும்.

இரத்த பேதி, சீதபேதி, ஆசனக்கடுப்பு, மூலரோகம் ஆகியவை தீரும் 
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட இரத்த பேதி, சீதபேதி, ஆசனக்கடுப்பு, மூலரோகம் ஆகியவை தீரும்.

நரை முடி குறைய
அதிமதுரம், கசகசா, பால் சேர்த்து அரைத்து வாரம் 2 முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து குளித்து வர நரை முடி குறையும்.  

முடி உதிராமல் இருக்க:
சீதாப்பழவிதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிராது.
(அ)
வெந்தயத்தை தேங்காய் பாலில் ஊறவைத்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.

கீழாநெல்லி வேர் சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வர முடி வளரும்.

கசகசாவை ஊற வைத்து அரைத்து வாரம் 2 முறை தலையில் தேய்த்து  குளித்து வர முடியின் செம்பட்டை நிறம் மாறும்.

சளி, ஜீரணம், கொழுப்பை கட்டுப்படுத்த:
ஆப்பிள், இஞ்சி, எலுமிச்சை சாறு, வெள்ளை பூண்டு இவற்றை அரைத்து கொதிக்க வைத்து தேனுடன் சாப்பிட்டால் சளி, ஜீரணம், கொழுப்பை கட்டுப்படுத்தும்.

வாயுத்தொல்லை:
ஆடாதொடா இலையை அவித்து தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வாயுத்தொல்லை குறையும்.

முகம் பளபளப்பாக மாற
கஸ்தூரி மஞ்சள், பயத்த மாவு தயிருடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.

முகம் பொளிவு பெற
பாலில் எலுமிச்சை சாறை கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து முகம் கழுவினால் முகம் பொளிவு பெறும்.
முகப்பரு:
வெந்தயக்கீரையை அரைத்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகப்பரு குரையும்.

சர்க்கரை நோய்:
1. ரோஜாப்பூ, கடுக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து சிறிதளவு சாப்பிட்டு தண்ணீர் பருகி வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

அல்லது 

2. வேப்பம் பூ பொடி, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவல் கொட்டை பொடி நான்கும் சேர்த்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குறையும்


மூலம்:
20 கிராம் பழம்பாசியின் இலையை அரை லிட்டர் பாலில் காய்ச்சி வடிகட்டி எலுமிச்சை, தேன் கலந்து காலை மாலை குடிக்க மூலம் குறையும்.

பல் வலி குறைய:
துத்தி இலை, வேர் இவற்றை காய்ச்சி அந்த 
நீரை அடிக்கடி வாய் கொப்பளித்து வர பல் வலி குறையும்.

உடல் அரிப்பு நீங்க:
சிறிதளவு வேப்பமர பட்டையை எடுத்து அதை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்நீரில் குளித்து வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

வயிற்று பொறுமல் குணமாக:
ஒரு கையளவு ஓமத்துடன் 3 வெற்றிலை சேர்த்து நன்றாக இடித்து பிழிந்து தேன் சேர்த்து பருக வயிற்று பொறுமல் குணமாகும்.

குடல் வலிமை பெற:
நம் வீடுகளில் வைக்கும் ரசத்தில் புளிக்கு பதிலாக வில்வ மரத்தின் பூக்களை பயன்படுத்தி சாப்பிட்டு வர குடல் வலிமை பெறும்.

வயிற்று வலி குணமாக:
ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தை பொரித்து இடித்து தூள் செய்து ஒரு குவளை மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.

மார்பு படபடப்பு, வலி குணமாக:
கிஸ்மஸ் பழம், கொத்தமல்லியை தண்ணீரில் சுட வைத்து காலையில் அரைத்து வடிகட்டி குடித்தால் மார்பு படபடப்பு, வலி குணமாகும்.

மார்பு எரிச்சல் குணமாக:
சோம்பு, கொத்தமல்லி, சுக்கு, பனைவெல்லம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வர மார்பு எரிச்சல் குணமாகும்.


குடல் புண் குணமாக:
தினமும் மணத்தக்காளி கீரையை துவையல் செய்து மதிய உணவுடன் உண்டு வர குடல் புண் குணமாகும்.

கொப்புளங்கள் வராமல் இருக்க:
தூள் உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் வராது.

கண் பார்வை தெளிவு பெற:
பொன்னாங்கண்ணி கீரையை வேகவைத்து வெண்ணைய் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

Galaxy Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable