நமக்கு 30 வயசானா ஒரு ஐந்து விஷயத்தையும் கத்துக்கணும் அதை கடை பிடிக்கணும்



நமக்கு 30 வயசானா ஒரு ஐந்து விஷயத்தையும் கத்துக்கணும் அதை கடை பிடிக்கணும் 


1. சுய மதிப்பீடு (Self Validation)


நம்மள பற்றி ஒரு அப்ஸர்வேஷன், நமக்கு நல்ல மதிப்பு இருக்கணும். மூன்றாவது நபர் என்ன சொல்வாங்கன்றது நமக்கு தேவையில்லாத விஷயம். அவங்க என்ன வேணா சொல்லிட்டு போகட்டும். ஆனா, சரியான வழியில நம்ம போறோம்ன்ற சுய மதிப்பீடு,


2. 'நோ' சொல்ல பழகுதல் (Saying NO)


இந்த 'Saying NO'. எது எதுக்கெல்லாம் எஸ் சொல்லணும், எது எதுக்கெல்லாம் நோ சொல்லணும்னு முதல்ல கத்துக்கணும். எல்லா விஷயத்துக்கும் எஸ்ன்னு சொல்லிட்டிருந்தோம்னா, பின்னாடி வந்து நிறைய விஷயத்துக்கு நம்மள மீறி நோ சொல்ற மாதிரி ஆயிடும். அதனால, எந்த விஷயத்தை ஸ்டார்ட்டிங்லேயே 'இதெல்லாம் முடியாது' அப்படின்னு நோ சொல்ல கத்துக்கணும். 'Saying NO' is a good habit.


3.ஆரோக்கியம் (Health)


இந்த உடல் நல்லா வச்சுக்கிட்டோம்னா நிச்சயமா வந்து லைஃப் ஓட ஸ்பான் அதிகமாகும். இறைவன் நிர்ணயித்த 70 வயதுன்றதை 75 வயதா மாத்தலாம். 75 நிர்ணயித்தான் 80 வயதா மாத்தலாம். இறைவனுக்கே சவால் விடக்கூடிய ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா உடல் ஆரோக்கியம் என்பது.


முதலில் எல்லாம் உணவே மருந்து சொன்னாங்க ஆனா இப்போ நம்ம சாப்பிடுற சாப்பாடு தான் நமக்கு அவளோ தீங்கா இருக்கு 


4.கூடுதல் வருமானம் (Passive Income)


ஒரே தொழில்ல, ஒரே வருமானம் மட்டும் இல்லாமல், எல்லா மற்ற இடத்துலயும் வந்து நம்மளுடைய வருமானம் ஈட்டக்கூடிய அளவில் நம்ம எல்லாத்தையும் பண்ணிட்டோம்னா நல்லாயிருக்கும். அது வந்து இந்த பிசினஸ கெடாமல் அதை செஞ்சோம்னா, அதன் மூலமா இன்கம் ஜெனரேட் பண்ணோம்னா நிச்சயமா நல்லாயிருக்கும்.


இந்த ஒரு காரணத்திற்கு தான் இங்க நான் இருக்க பாக்குறேன் என்னோட வேலையும் பார்த்து இங்கையும் ஒரு தொகை வந்தா நல்லதுன்னு 


5.நல்ல நண்பர்கள் (Friends)


நல்ல நண்பர்கள் நம்மளை சூழ்ந்து இருந்தாங்கன்னா, சரியான பாதையில நம்மளை கூட்டிட்டு போவாங்க.


இங்க இருக்க இன்னொரு காரணமும் ஒரு நட்பு வட்டாரம் உருவாக்க தான்

Post a Comment

Previous Post Next Post