ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளைம் (Health Insurance Claim) நிராகரிக்கப்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?
எங்கே புகார் தருவது?
மருத்துவ காப்பீடு திட்டம் வைத்து உள்ளவர்கள் அனைவரும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய தகவல் .
முதலில் நிராகரிப்புக்கான காரணத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
காப்பீட்டு நிறுவனம் அனுப்பிய 'நிராகரிப்பு கடிதத்தை' (Rejection Letter) கவனமாகப் படியுங்கள்.
ஏன் க்ளைம் நிராகரிக்கப்பட்டது? (உதாரணமாக: ஆவணங்கள் குறைபாடு, காத்திருப்பு காலம், பாலிசியில் இல்லாத சிகிச்சை).
உங்கள் பாலிசி ஆவணங்களை (Policy Documents) வைத்து, நிராகரிப்புக்கான காரணம் சரியானதா எனச் சரிபார்க்கவும்.
ஒருவேளை பாலிசி நிபந்தனைக்கு உட்பட்டு கிளைம் தர வில்லை என்றால் அதை ஒன்றும் செய்ய முடியாது.
ஆனால் சில சமயங்களில் பாலிசி நிபந்தனை படி நமக்கு கிளைம் கிடைக்க வேண்டும் ஆனால் நிறுவனம் தர வில்லை என்றால் புகார் அளிக்கலாம்.
அதற்கான 5 வழிமுறைகள்.
1) cashless நிராகரிப்பு என்றால் நீங்கள் அனைத்து சிகிச்சைகளும் முடித்து மருத்துவனையில் இருந்து வெளியே வந்து 15 நாளில் Reimbursement முறையில் சரியான ஆவணங்கள் அதாவது மருத்துவ மனை சிகிச்சை விபரம் ( discharge summary) , பரிசோதனை முடிவுகள் ( lab test) , கட்டண பில், உங்கள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு நகல், பாலிசி நகல், reimbursement விண்ணப்பம் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். சில நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி தருகிறது. சில நிறுவனங்களில் நேரில் சமர்பிக்கலாம். அவ்வாறு விண்ணபித்து அதுவும் நிராகரிப்பு ஆனால் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.
2) reimbursement நிராகரிப்பு ஆன உடன் முதலில் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமே மேல்முறையீடு செய்யுங்கள் (Internal Grievance). உங்கள் மருத்துவ காப்பீடு நிறுவனத்தின்
Grievance விபரம் அறிய உங்கள் காப்பீடு நிறுவனத்தின் இணையதளத்தில் தேடலாம் அல்லது IRDAI இணையத்தில் பெறலாம். IRDAI இணையத்தின் லிங்க் முதல் comment- ல் உள்ளது.
உங்கள் மருத்துவ காப்பீடு நிறுவனத்தில் முறையீடு செய்ய 2 அல்லது 3 லெவல் இருக்கும் அதாவது Grievance level 1 ,2,3
இந்த இரண்டு அல்லது 3 லெவல் முடிந்தும் உங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் 15 நாட்கள் கழித்து அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.
3) இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முறையிட்டு தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் IRDAI - வில் புகார் அளிக்கலாம்.
புகார் அளிக்க
அலைபேசி எண் 155255, 18004254732
Email மூலம் கூட புகார் தெரிவிக்கலாம். அல்லது
Bima Bharosa Portal மூலம் ஆன்லைன் புகார் அளிக்கலாம்
( Email id, Bima Bharosa Portal லிங்க் முதல் comment- ல் உள்ளது)
தபால் மூலம் கூட புகார் அளிக்கலாம் அதற்கான முகவரி
General Manager
Insurance Regulatory and Development Authority of India(IRDAI) Consumer Affairs Department – Grievance Redressal Cell.
Sy. No.115/1, Financial District, Nanakramguda,
Gachibowli, Hyderabad – 500 032.
IRDAI மூலம் தீர்வு கிடைக்க வில்லை என்றால் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.
4) IRDAI மூலம் தீர்வு கிடைக்க வில்லை அதே நேரம் கிளைம் தொகை 50 லட்சம் வரை என்றால் Insurance Ombudsman -ல் புகார் அளிக்கலாம். நேரடியாக கூட IRDAI செல்லாமல் இங்கு புகார் அளிக்கலாம்.
தபால் மூலம் புகார் அளிக்க
Shri K.Vinayak Rao
Insurance Ombudsman
Office of the Insurance Ombudsman,
Fatima Akhtar Court, 4th Floor, 453,
Anna Salai, Teynampet,
CHENNAI – 600 018.
Tel.: 044 - 24333668 / 24333678
Email அல்லது ஆன்லைன் மூலம் கூட புகார் அளிக்கலாம் அதற்கான Email id மற்றும் ஆன்லைன் லிங்க் முதல் comment- ல் உள்ளது
Insurance ombudsman மூலம் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.
5)நுகர்வோர் நீதிமன்றத்தை (Consumer Court) அணுகுதல்
கிளைம் தொகை 50 லட்சம் வரை என்றால் மாவட்ட நுகர்வோர் கோர்ட்
கிளைம் தொகை 50 லட்சம் முதல் 2 கோடி வரை என்றால் மாநில நுகர்வோர் கோர்ட்
கிளைம் தொகை 2 கோடிக்கு மேல் என்றால் மத்திய நுகர்வோர் கோர்ட் சென்று புகார் அளிக்கலாம்.
ஆன்லைன் மூலம் கூட புகார் அளிக்க முடியும் அதற்கான லிங்க் முதல் comment- ல் உள்ளது
மருத்துவ காப்பீடு பற்றி அப்டேட்ஸ்க்கு sunlifecare. blogspot.com ஐ follow பண்ணுங்க. இந்த தகவல் உங்களுக்கு பிடித்து இருந்தால் தயவு செய்து share செய்து மற்றவர்களுக்கு சென்று சேர உதவுங்கள்.
மேலும் விவரங்களுக்கு
979070321
9444681965
தொடர்பு கொள்ளவும்
#healthinsurance
#claims
#irdai

Post a Comment