காலை உணவின் நன்மைகள்
காலை உணவு
மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் அவசர காலத்தின் காரணமாக அதை சிலர் எளிமையாக
புறக்கணித்து விடுகிறார்கள். காலை உணவைத் தவிர்க்கும் சிலர் 10 அல்லது 11 மணிக்குள்
சோர்ந்துவிடுவார்கள். செய்யும் வேலைகளில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த
முடியாது.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தொடங்கிக் கல்லூரி செல்லும்
மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் எனப் பலரும்
இன்றைக்குத் தவிர்க்கக்கூடிய ஒரு விஷயமாக உருவெடுத்திருக்கிறது “காலை உணவு”. ஒரு நாளில்
அதிக இடைவெளிக்குப் பிறகு நாம் உண்பது காலை உணவுதான். அதனால்தான் அதை ‘பிரேக்-பாஸ்ட்’ என்று அழைக்கின்றோம். பாரம்பரியமாக இருக்கும் காலை உணவுகளில்
உப்புமா, இட்லி, பொங்கல்
போன்ற உணவுக்கு ஈடு இணையே இல்லை. இதன் தயாரிப்பிலும் சாப்பிடும் முறையிலும்
சமச்சீரான சத்துகள் நம் உடலுக்குக் அதிகம் கிடைக்கின்றன.
இட்லி
பாரம்பரிய
உணவான இட்லி உண்பதால், உடல்
ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையை
சரியான அளவில் பராமரிக்கவும் முடியும். சமீபத்திய ஆய்வு ஒன்றில், இட்லி இரண்டு மடங்கு சத்துக்கள் நிறைந்த ஓர் சிறந்த காலை உணவு
என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
வெண் பொங்கல்
வெண்
பொங்கலும் தமிழ்நாட்டில் காலை வேளையில் செய்து சாப்பிடும் ஒரு காலை உணவு. இதில்
கலோரிகள் அதிகமாகவும், கொலஸ்ட்ரால்
மற்றும் சர்க்கரை குறைவாகவும் உள்ளதால் இதனை அவ்வப்போது காலை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு
நல்லது.
தோசை
தென்
இந்தியாவில் பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவுகளில் தோசை புகழ்பெற்ற
உணவாகும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவராலும் விரும்பி
சாப்பிடப்பிடப்படும் தோசையில் ஒரு சில நன்மைகள் உள்ளன. தோசையை அதிகமாக
சாப்பிடுவதனால் வைட்டமின் மற்றும் மினரல்ஸ் அதிகமாக கிடைக்கிறது.
அடை தோசை
அடை தோசை
மிகவும் ஆரோக்கியமான ஒரு காலை உணவு. இந்த தோசையை பல்வேறு பருப்பு வகைகள் சேர்த்து
செய்வதால், இதனை காலை வேளையில் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதுடன், விரைவில் பசியெடுக்காமலும் இருக்கும்.
இடியாப்பம்
இடியாப்பம்
என்பது ஒரு மென்மையான மற்றும் சுவையான உணவு. பாரம்பரிய காலத்திலிருந்தே இந்த
இடியாப்பம் நடைமுறையில் உள்ளது. ஆவியில் வேகவைத்து சாப்பிடுவதாலும் எளிதில்
சீரணமாகும் சக்தி கொண்டுள்ளதாலும் இதை வயதானவர்களும் , சிறு குழந்தைகளும் சுலபமாக உட்கொள்ளும் உணவாக உள்ளது. மேலும்
இதில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் , இரும்பு
சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு அதிக அளவிலும், எந்த
நேரத்திலும் கொடுக்கும் உணவாக உள்ளது.
இன்றைய உலகில் நம்மில் பலர் காலை உணவு உண்பதில்லை. நாம் இந்த
காலை உணவை தவிர்ப்பதாலே உடலில் குறைபாடுகள், நோய்கள்
ஏற்பட காரணமாக அமைகிறது. நம் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் பெற முடியும்.
காலை உணவின் முக்கியத்துவம் பற்றி அனைவரும் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
அக்குபஞ்சர் பயிற்சி
இத்துடன் அக்குபஞ்சர் பயிற்சி
தினமும் காலையில் செய்வதன் மூலம் நம் உடலை ஆரோக்கியமுடன் வாழலாம்.
ஆலோசனைக்கு அணுகவும் : 8148683160